Monday, May 22, 2006

தமிழ் மணத்தில் ஒரு புதிய பறவை

தமிழ் இணைய பதிவாளர்களுக்கு வணக்கம்.
நான்கு மாதங்களுக்கு முன்வரை அலுவலக வேலை சுளுக்கு எடுக்கும். குறைந்தது ஒரு நாளைக்கு 12-13 மணி நேரம் அலுவலகத்திலேயே கழியும். அப்போதெல்லாம், மின்னஞ்சல் பார்த்துக் கொள்ளவும், வங்கிக் கணக்கு பார்க்கவும் மட்டுமே இணையத்திற்கு வருவதென்றிருந்தது.

திடீரென எனக்கே தெரியாத ஏதோ ஒரு காரணத்தினால் என்னை வேறு ஒரு ப்ராஜெக்டிற்கு மாற்றி விட்டார்கள். அங்கோ ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை இருந்தால் அதிகம். சஹாரா பாலைவனத்தில் பிறந்து வளர்ந்தவனை சியாச்சின் மலைச் சிகரத்திற்கு அனுப்பியது போலிருந்தது. வெறுமனே காலம் கடத்துவது எவ்வளவு கடினமானது என்பது அப்போது புரிந்தது. நல்ல வேளை அனாதை ரட்சகனாய் வந்து என்னை காப்பாற்றியது இணையம். இப்போதெல்லாம் பாதி நாள் கழிவது இணையத்தில் தான்.

அப்படி ஒரு நாள் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது தடுக்கி விழுந்த இடம் தான் தமிழ்மணம். அதன் பிறகு மொத்தமாக 3 மாதங்கள் தமிழ்மணத்தை விட்டு வெளியேறவேயில்லை. தமிழ்மண அனுபவத்தோடு, என் தமிழார்வமும் சிறிது என்னை உசுப்பிவிட்டதால், ஒரிரண்டு கட்டுரைகளை எழுதி திண்ணைக்கு அனுப்பினேன். திண்ணையில் மட்டும் தானே திட்டி பின்னூட்டம் இட இயலாது, அந்த தைரியத்தில் தான்.

பின்னர் ஒரு நாள் என் நண்பர் ஒருவருடன் தமிழன் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது, அது குறித்து ஒரு பதிவை எழுதி முத்து(தமிழினி) அவர்களை திராவிட தமிழர்கள் வலைப்பூவில் பதிக்க வேண்டினேன். அப்பொழுதுதான், எனக்கு சொந்தமாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்கும் விபரீத ஆசை வந்தது. இதோ ஆரம்பித்துவிட்டேன்.

நெற்றிக்கண்-நக்கீரன் :- சொந்தப் பெயரில் வலைப்பூ ஆரம்பிக்க பயந்தது(யார் அடி வாங்குறது) தவிர வேறு பெயர்க்காரணம் ஏதுமில்லை.

உங்கள் அனைவரின் நல்லாசியுடன்
- நக்கீரன்

6 comments:

கோவி.கண்ணன் said...

நக்கீரன் வாங்க வாங்க, உங்களைப் பார்ப்பதற்காகவே நெற்றிக்கண்கள் காத்துகொண்டிருக்கின்றன. சொல்லம்பில் சுவைசேர்த்து வீழ்த்துங்கள்

Nakkiran said...

மிக்க நன்றி கோவிகண்ணன்

குமரன் (Kumaran) said...

வாங்க வாங்க நக்கீரன்.

VSK said...

நக்கீரன் வாங்க வாங்க !!

வாங்க வாங்க நக்கீரன் !!

Nakkiran said...

SK மற்றும் குமரன் அவர்களுக்கு,
வரவேற்பிற்கு மிக்க நன்றி

பொன்ஸ்~~Poorna said...

வாங்க நக்கீரன்..:)

தமிழிசைன்னு ரொம்ப அழகான பெயர் வச்சிருக்கீங்க ஐயா, உங்க பெண்ணுக்கு..