Thursday, March 08, 2007

Obsessive-Compulsive Disorder (OCD)


அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு USA Netxwork தொலைக்காட்சியில் வரும் MONK தொடர் கண்டிப்பாக தெரிந்து இருக்கும். பார்க்காதவர்களுக்கு, மாங் என்னும் கதாபாத்திரம் ஒரு தனியார் துப்பறியும் நிபுணர். இவர் நம்ம ஊர் துப்பறியும் சாம்பு மாதிரி தான். வித்தியாசமா யோசித்து குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பார். ஆனால் இவருக்கு Obsessive-Compulsive Disorder (OCD)ன்னு (தமிழ்ல என்னன்னு சொல்றதுங்க) ஒரு குறைபாடு. அதாவது எதைக் கண்டாலும் பயம், சந்தேகம் அல்லது அறுவெறுப்பு. நம்ம தெனாலி கமல் தன்னோட வியாதி பத்தி சொல்லுவாரே அதே குறைபாடுதான்... கமல் படத்துல இலங்கைல நடந்த போர் மாட்டிக்கிட்டதால அந்த குறைபாடு வந்ததுன்னு சொல்லுவார். இந்த மாங் தொடரில் கூட மாங்கின் மனைவி இறந்ததால அவருக்க இந்த குறைபாடு வந்ததா சொல்வார்கள்.
.
உண்மையிலேயே இந்த குறைபாடு வருவதற்கான தெளிவான காரணங்கள் இன்னும் நிரூபிக்கப்படலன்னு இத்துறை நிபுணர்கள் சொல்கிறார்கள். இதற்கான ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டுள்ளது. மூளையின் முற்பகுதியில் இருந்து உட்பகுதிகளுக்கு விஷயங்களை கொண்டுசெல்வதில் உள்ள குறைபாடு தான் இதற்கு காரணம் என்று ஆராய்ச்சி ஒரு கருத்தை நிறுவுகிறது. இப்படி மூளையில் விஷயங்களை கொண்டு செல்ல பயன்படும் வேதிப்பொருள் செரொடொனின்(serotonin). இந்த செரொடொனின் குறைபாடு இந்த வியாதிக்கான காரணமாக இருக்ககூடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். மூளையின் செயல்பாடுகளை படம் பிடித்து பார்த்ததில், செரொடொனின் அதிகரிக்க மருந்து கொடுத்த போதும், மற்றும் cognitive behavioral psychotherapy செய்த போதும் மூளையின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
.
இந்த குறைபாடு 9 வயது முதல் 40 வயது வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆண் பெண் இருபாலருக்கும் வரலாம். ஆனால் இதுவரை இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 33% பேருக்கு சிறுவயதிலேயே இக்குறைபாடி தோன்றிவிட்டதாம். இது ஒரு பரம்பரை வியாதி இல்லை என்றாலும் பெற்றோருக்கு இக்குறைபாடு இருந்தால் அது குழந்தைகளை தாக்குவதற்கான் வாய்ப்பு உண்டாம். இப்போதைய நிலவரப்படி சராசரியாக நான்கு மருத்துவர்களை பார்த்து, சராசரியாக 9 வருடம் மருத்துவம் செய்த பின்னர்தான் இக்குறைப்பாட்டை சரியாக கண்டு கொள்ள முடிகிறதாம்.


பக்கத்து படத்தில் இருப்பவர் பெயர் ஜெஃப் பெல் (Jeff Bell). அமெரிக்காவில் பே ஏரியாவில் இருக்கும் இவர் ஒரு வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர். இவருக்கு இக்குறைபாடு 7 வயதில் தோன்றியது என்கிறார். ஆனால் இளைஞனாக இருந்த போது நடந்த ஒரு படகு விபத்து இக்குறைப்பாடு வீரியத்துடன் வெளிக்கொணர்ந்ததாம். அதுவரை சகஜ வாழ்க்கையிலிருந்த அவரால் அதன் பின்னர் எந்த ஒரு வேலையும் செய்ய இயலாமல் எதற்கெடுத்தாலும் பயப்படுவாராம். பிறகு மனநலமருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பின் சகஜ் வாழ்க்கைக்கு திரும்பிய அவர் OCD பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
"Rewind, Replay, Repeat" என்பதே அவர் புத்தகத்தின் தலைப்பு. எல்லாருக்கும் பயம், சந்தேகம் என்பது உண்டு. எல்லோரும் கதவை பூட்டியபின் ஒரு முறைக்கு இருமுறை இழுத்து பார்க்கிறோம், ஒருதடவை பார்த்தாலே போதும் ஆனால் இரண்டுத்டவை சரி பார்க்கிறோம். வீட்டை விட்டு செல்லும் போது அடுப்பு அணைத்தோமா என்று சரிபார்க்கிறோம். ஒருதடவை சரி இருதடவை செய்தாலும் சரி, ஆனால் அதையே பலதடவை செய்தால் அதுதான் OCD என்கிறார் பெல். ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போல் இது நிச்சயம் biochemical பிரச்சனையே என்கிறார். இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் இக்குறைப்பாட்டை குணமாக்க முடியும் என்கிறார் இந்த தன்னம்பிக்கையாளர்.

4 comments:

சேதுக்கரசி said...

நல்ல பதிவு. வீட்டை விட்டுப் போகும்போது, தூங்கப் போகும்போது.. "அடுப்பை அமத்திட்டேனா?" அப்படின்னு சந்தேகம் வந்து போய்ப் பார்க்கிறது கூட OCD தான், ஆனா ஒரு சிறிய அளவில்!

பத்மா அர்விந்த் said...

நல்ல பதிவு. சில பேர் வீட்டை சுத்தம் செய்தபின் துளி தூசி பட்டாலும் திரும்ப சுத்தம் செய்வது, இன்னும் சிலருக்கு வைத்த சாமான்கள் வைத்த இடத்தைவிட்டு ஒரு அங்குலம் நகர்ந்தாலும் திரும்ப வைப்பது போன்ற பழக்கங்கள் உண்டு. இவையும் இவ்வகையை சேர்ந்தவையே.

துளசி கோபால் said...

நல்ல பதிவு.

இதைப் பத்தி எழுதணுமுன்னு ரொம்ப நாளா ஒரு எண்ணம் இருக்கு. இங்கே ஒரு 6 வார கோர்ஸ் போய் வந்த அனுபவம் இருக்கு:-)

Nakkiran said...

சேதுக்கரசி, பத்மா அர்விந்த், துளசி கோபால் தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி