Sunday, March 11, 2007

விலையுயர் கற்கள் கண்காட்சி




சென்ற வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமெரிக்காவின் சாண்டியோகோ நகரில் விலையுயர் கற்கள் கண்காட்சி நடைபெற்றது. முத்து, பவளம், வைரம், ரூபி, ஜேட் மற்றும் பல எனக்கு விவரம் தெரியாத கற்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. மிகவும் அழகான கண்ணைப் பறிக்கும் கற்கள் அனைத்து வண்ணங்களிலும் அனைத்து விலைகளிலும் இங்கு கிடைக்கின்றன. இவர்கள் வருடத்திற்கு 40 கண்காட்சிகள் அமெரிக்கா முழுவதும் நடத்துகிறார்கள். மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.

http://gemfaire.com/
.









என் மனைவி சென்ற வருடம் சுமார் $100 கொடுத்து இக்கண்காட்சியில் ரூபி வாங்கினார்கள். பின்னர் இந்தியா சென்ற பொழுது சென்னையில் ஒரு நகைக்கடையில் அந்த ரூபி மணிகளை காட்டிய போது, அது நல்ல வகை கற்கள்தான் என்றும் அதன் விலை இந்தியாவில் இன்னுமதிகமாக இருக்கும் என்றும் சொன்னார்கள். உண்மையோ பொய்யோ நாம் ஏமாறவில்லை என்ற மனதிருப்தியடைந்தேன்



இன்னொரு முக்கியமான விஷயம், இக்கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. அதில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் இந்தியர்களுடையது. விசாரித்ததில் அமெரிக்காவில் இந்தியர் மிகப்பெருமளவில் நகை வியாபாரம் செய்வதாக அறிந்து ஆச்சரியப்பட்டேன். மற்றொரு ஆச்சரியமான விஷயம், கண்கட்சியில் வைக்கப்பட்ட நகைகளில் மிகப்பெருமளவில் 'Made in India' Tag இருந்தது. இந்தியாவிலிருந்து விலையுயர் கற்கள் பெருமளவில் மேலைநாடுகளுக்கு இறக்குமதியாகிறதாம். வைரம் பட்டை தீட்டும் தொழிலில் இந்தியாதான் முண்ணனியில் இருப்பதாக எங்கோ படித்ததாக ஞாபகம்.

http://gemfaire.com/ இந்த சுட்டிக்கு சென்று உங்கள் ஊரில் இக்கண்காட்சி நடைபெறுகிறதா என்று பார்க்கவும். எதுவும் வாங்கவில்லையென்றாலும் கண்டிப்பாக ஒருதடவை சென்று பார்த்து வரவும். வித்தியாசமான அனுபவத்திற்கு நான் உத்தரவாதம்.

1 comments:

சேதுக்கரசி said...

http://www.intergem.net நிறுவனமும் இப்படிப்பட்ட gem show நடத்தும்.