Thursday, November 16, 2006

என்னதான் நடக்குது நம்ம ஊருல...

டிசம்பர் மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னை வரலாம் என்பது என் திட்டம், அதற்கு இரு மாதம் முன்பாகவே என் மனைவியும் குழந்தையும் சென்னைக்குச் சென்றுவிட்டனர். சென்றவுடன், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதாயிற்று... சரி ஜெட்லேக் மற்றும் காலநிலை மாறுதல்களால், வெகுநாள் கழித்து இந்தியா திரும்பும் குழந்தைகளுக்கு வழக்கமாய் ஏற்படும் உபாதைகளாகத்தான் இருக்கும் என எண்ணினேன்... இப்போது மழை வேறு வெளுத்துக்கட்டுகிறதே.

மனைவியுடன் தொலைபேசும் போது அவர் சொன்ன விஷயங்கள் வருத்தம் கலந்த ஆச்சரியம் அளித்தது. என் மனைவி சென்ற மருத்துவமனை/மருத்துவரைக் காண ஏகப்பட்ட நோயாளிகளாம். மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்படும் அள்விற்கு, மக்கள் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளார்களாம். ஏதேதோ பெயரில் ஜுரம். பெரும்பாலோனோர் வீட்டில் ஒருவராவது பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் வீட்டிலேயே இருவருக்கு சிக்கன்-குனியா... ஒருவருக்கு ஏதோ வைரஸ் ஜுரம். போதாக்குறைக்கு மெட்ராஸ்-ஐ வேறு... குழந்தைகளும், முதியவர்களும் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனராம்...

அவர் சொன்ன விஷயங்களை கேட்டவுடன் இங்கே எனக்கே ஜுரம் வந்தது போலாகிவிட்டது... மக்களே முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும். உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தாரின் நலனை முன்னெச்சரிக்கையுடன் இருந்து காத்துக் கொள்ளவும்

4 comments:

வடுவூர் குமார் said...

ஆமாங்க அங்கு,பலமுனை தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது.
ஊருக்கு திரும்பி போகும் போது நோய் எதிர்ப்பு சக்தி கூடியிருக்கும்.
தீமையில் நண்மை.
:-))

சிறில் அலெக்ஸ் said...

இன்னைக்குத்தான் ஊருக்குப் போறதுபற்றி ப்ளான் போட்டோம் இப்படி குண்டான குண்டா தூக்கிப்போடுறீங்களே.

:)

Nakkiran said...

வடுவூர் குமார்

சரியா போச்சு.. அப்போ இங்கே இருக்குற வெள்ளக்கார பசங்களையெல்லாம் ஒரு 3 மாசத்துக்கு இந்தியா அனுப்பி வைப்போமா...எல்லாருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கூடிடும் :)



சிறில் அலெக்ஸ்:

இதுக்கெல்லாம் பயந்து நம்மூருக்கு போறத தள்ளி போடலாமா??? தைரியாமா கிளம்பி போவோம் வாங்க.. பார்த்துக்கலாம்...

Anonymous said...

ஊருக்குப் போகும் முன் traval கிளினிக் செல்வது நல்லது தான் ஆனா எக்கச்சக்கமாக செலவாகும். நான் இரண்டு முறை டிராவல் கிளினிக் சென்றிருக்கிறேன். ஒரு முறை ஃப்ளூ ஷாட் மட்டும் போட்டார்கள், வேறொன்றும் எனக்குத் தேவையிருக்கவில்லை. இப்போதெல்லாம் செல்வதில்லை... குழந்தைகளை டிராவல் கிளினிக் அழைத்துச் செல்வது நலம், குறிப்பாக infant-ஆக இருந்தால்.