Monday, November 20, 2006

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...3

ஸ்டெம் செல்கள் குறித்து தேட தேட மிக ஆச்சரியமான பல விஷயங்கள் தெரிய வருகின்றன. ஸ்டெம் செல்கள் அதிக அடர்த்தியுடன் காணப்படும் மற்றொரு பொருள் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி இரத்தம். ஆம் குழந்தை பிறந்தவுடன் தேவையில்லையென்று அறுத்து அப்புறப்படுத்தபடும் தொப்புள்கொடியில் இருக்கும் இரத்ததிலிருந்து நிறைய ஸ்டெம்செல்களை பிரித்தெடுக்க இயலும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இவ்வகையான ஸ்டெம் செல்கள், எலும்பு மஜ்ஜை மற்றும் வழக்கமான இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கும் ஸ்டெம் செல்களை விட மிகச் சிறந்தது என்றும், இந்த வகை ஸ்டெம் செல்களை உபயோகிக்கும் போது நோயாளியின் செல்கள் பெரும்பாலும் இதை நிராகரிப்பதில்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.

இந்த செல்கள் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பதால், நோயாளி உடலில் செலுத்தும் போது, நோய்வாய்ப்பட்ட செல்களால், இதனை அறிந்து கொள்ள இயலுவதில்லை. அதனால் நோய் இந்த செல்களுக்கு பரவுவதில்லை. அதேபோல் முழுவளர்ச்சியில்லாததால், இச்செல்களால் நோயாளிக்கு வேறு எந்த வகையான வியாதியையும் கொண்டு செல்ல இயலாது. எனவே இவ்வகையான செல்கள் மிகவும் பாதுகாப்பானவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபோன்ற தொப்புள்கொடி இரத்தத்தை பாதுகாக்க பல வங்கிகள் இப்போது அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தோன்றியுள்ளன. அந்நிறுவனங்களில் குழந்தை பிற்ப்பதற்கு 30 நாட்கள் முன்பு பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் குழந்தை பிறந்த உடன் செய்ய வேண்டிய செய்முறையை அவர்கள் நம்முடைய மருத்துவருக்கு அனுப்பிவைப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், நம் மருத்துவர் தொப்புள் கொடி இரத்தத்தை பாதுகாப்பான முறையில் சேகரித்து அந்நிறுவனத்திற்கு அனுப்புவார். குழந்தை பிறந்த 36லிருந்து 48 மணி நேரத்திற்குள் முறையாக பாதுகாக்கப்பட்ட இரத்தம் அவ்வங்கிக்குச் சென்றடைய வேண்டும். பிறகு அந்த இரத்தம் நீங்கள் விரும்பும் வரை பாதுகாக்கப் படும். இதற்கான செலவு ஆண்டுதோறும் 125 முதல் 150 அமெரிக்க டாலர். இதுதவிர முதல்முறை பதிவுக்கட்டணம் சுமார் 1000 அமெரிக்க டாலர்.

சரி, இப்படி சேகரித்து வைப்பதின் அவசியம் என்ன? உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் பிரச்சனை வந்தாலும் இந்த இரத்தத்திலிருந்து ஸ்டெம் செல் பிரித்தெடுத்து வைத்தியம் செய்யலாம். அதுமட்டுமன்றி உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் நோய்களையும் தீர்க்க இந்த செல்கள் பெரும்பாலும் உதவுமாம். ஏன் பல சமயங்களில் பெற்றோர்களின் நோய் தீர்க்கவும் இதை பயன்படுத்தலாம். அனைத்திற்கும் மேலாக, இன்னும் சில ஆண்டுகளில் ஸ்டெம் செல்கள் எல்லாவகையான உயிர்க்கொல்லி வியாதிகளுக்கும் நிவாரணம் அளிக்கப் போகிறது என்று ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல பொதுமக்களும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அதற்காக இப்பொழுதே அவர்களின் ஸ்டெம் செல்களை சேகரித்து பாதுகாக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.

இந்த தொப்புள் கொடி இரத்த ஸ்டெம்செல்களில் எந்த சர்ச்சையும் இல்லை. வீணாக குப்பைக்குப் போவதிலிருந்து இதை சேகரிப்பதால், எந்த எதிக்ஸ் மற்றும் மத நம்பிக்கை பிரச்சனையில்லை. மிகவும் எளிதில் சேகரித்து பாதுகாக்க முடியும். மற்றும் இவ்வகை செல்களின் வெர்சாலிடி ஆச்சரியபடும்படி உள்ளதால் இவ்வகை மருத்துவம் மிகவிரைவில் முன்னேற்றம் காணும் என்பது ஆராய்ச்சியாளர் எதிர்பார்ப்பு.

தொடரும்

9 comments:

சேதுக்கரசி said...

பதிவுக்கு நன்றி நக்கீரன்.

நம் குடும்பத்துக்காக சேகரிக்கிறோமோ இல்லையோ, அப்படி சேகரிக்காவிட்டால் தொப்புள்கொடி இரத்தத்தை தானம் செய்வது மிக மிக இன்றியமையாதது. தூக்கிப் போடப்போவதைத் தானே தானம் செய்கிறோம்? இதனால் நாம் இழக்கப்போவது ஒன்றுமில்லை. காப்பாற்றப்போவது ஒரு உயிராக இருக்கலாம்.

அனைத்துப் பெற்றோர்களும், குறிப்பாக, பெற்றோராகப் போகிறவர்களும் கருத்தில் கொள்ளவேண்டிய குறிப்பு இது.

மேலதிக தகவலுக்கு:

cordblood.org

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

தெரியாத செய்தி அறியும் வகையில் பதிந்ததற்கு நன்றி.

http://en.wikipedia.org/wiki/Stem_cells

இங்கு சென்று ஸ்டெம் செல்கள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன்.

கான்சர், பார்கிஸன் டிசீஸ் போன்றவற்றை இதன் மூலம் குணப்படுத்தலாம் என்பது வியப்பில் ஆழ்த்திய செய்தி.

மீண்டும் தகவல்களுக்கு நன்றி.

அன்பு said...

ஸ்டெம் செல் (மூல அணு) பற்றிய உங்கள் தகவல்களுக்கு நன்றி.

முந்தி ஒரு காலத்துல 'ஸ்டெம் செல்' பற்றி நான் எழுதிய பதிவு...

ஒரு வேண்டுகோள்:
பின்னூட்டவரத்தை வைத்து உங்கள் பதிவை முடிவு செய்யாதீர்கள். நீங்கள் அறிந்த, பிறர் அறியவேண்டிய தகவல்களை கண்டிப்பாக பதிவுசெய்யுங்கள். கூகுள்/யுனிக்கோடு யுகத்தில் - இன்று நம் நண்பர்கள் வாசிப்பதோடில்லாமல், என்றும் பயன் படும். நன்றி.

தமிழ் வலைப்பதிவுகளில் ஸ்டெம் செல்

தமிழ் இணையஉலகில் ஸ்டெம் செல்

Anonymous said...

நிறைய புதிய தகவல்களை அடங்கிய பதிவு். எளிமையான நடையில் அருமையான பதிவு.
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்

தொடர்ந்து எழுதுங்கள் . பின்னூட்டங்களின் எண்ணிக்கையை கண்டுகொள்ளாதீர்கள்

-- Vicky

Nakkiran said...

சேதுக்கரசி, செந்தில் குமரன், அன்பு, Vicky

பலருக்கும் பயனுள்ள வகையில், தான் தெரிந்துகொண்ட விஷயங்களை பகிர்ந்த கொண்ட அனைவருக்கும் நன்றி.

கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கிறது.. கூடிய விரைவில் அடுத்த பகுதி...

Maraboor J Chandrasekaran said...

¿øÄ ¯À§Â¡¸Á¡É À¾¢×. þó¾¢Â¡Å¢ø ±í¦¸íÌ stem cell bank ¯ûÇÐ ±ýÚ Â¡§ÃÛõ ¾¸ÅÄÇ¢ò¾¡ø, §ÁÖõ ÀÂÛûǾ¡¸ þÕìÌõ. ¿ñÀ÷ «ýÒ ¦º¡ýÉÐ §À¡ø,
// ஒரு வேண்டுகோள்:
பின்னூட்டவரத்தை வைத்து உங்கள் பதிவை முடிவு செய்யாதீர்கள். நீங்கள் அறிந்த, பிறர் அறியவேண்டிய தகவல்களை கண்டிப்பாக பதிவுசெய்யுங்கள். கூகுள்/யுனிக்கோடு யுகத்தில் - இன்று நம் நண்பர்கள் வாசிப்பதோடில்லாமல், என்றும் பயன் படும். நன்றி.//


±ýÚõ ¡ÕìÌõ ÀÂÛûǾ¡¸ þÕìÌõ. «§¾ ¿õÀ¢ì¨¸Â¢ø ¾¡ý ¿¡ý, ƒ¡ò§Ã¡À¡, Òí¸ ÁÃì ¸¡ö¸Ç¢Ä¢ÕóÐ ±Ã¢¦À¡Õû ±ÎôÀ¨¾ ÀüÈ¢Ôõ, ôÇ¡ŠÊì ²ý §¾¨Å!? ±ýÀÐ ÀüÈ¢Ôõ ±ÉÐ À¾¢Å¢ø À¾¢óÐû§Çý. ¿ñÀ÷¸û ÀÊòÐ, ¦ºö¾¢¨Â Áì¸Ç¢¨¼§Â ÀÃôÀ×õ. ¿ýÈ¢.

அன்பு said...

நண்பர் ஜெய. சந்திரசேகரன் டிஸ்கியில் சொன்னது, கீழே யுனித்தமிழில்:

நல்ல உபயோகமான பதிவு. இந்தியாவில் எங்கெங்கு stem cell bank உள்ளது என்று யாரேனும் தகவலளித்தால், மேலும் பயனுள்ளதாக இருக்கும். நண்பர் அன்பு சொன்னது போல்,

// ஒரு வேண்டுகோள்:
பின்னூட்டவரத்தை வைத்து உங்கள் பதிவை முடிவு செய்யாதீர்கள். நீங்கள் அறிந்த, பிறர் அறியவேண்டிய தகவல்களை கண்டிப்பாக பதிவுசெய்யுங்கள். கூகுள்/யுனிக்கோடு யுகத்தில் - இன்று நம் நண்பர்கள் வாசிப்பதோடில்லாமல், என்றும் பயன் படும். நன்றி.//


என்றும் யாருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதே நம்பிக்கையில் தான் நான், ஜாத்ரோபா, புங்க மரக் காய்களிலிருந்து எரிபொருள் எடுப்பதை பற்றியும், ப்ளாஸ்டிக் ஏன் தேவை!? என்பது பற்றியும் எனது பதிவில் பதிந்துள்ளேன். நண்பர்கள் படித்து, செய்தியை மக்களிடையே பரப்பவும். நன்றி.

அன்பு said...

சென்னையிலும் செயல்படும் LifeCell ஸ்டெம் செல் குறித்த ஆராய்ச்சியிலும், தொப்புள்கொடி இரத்தவங்கியும் நடத்தி வருகிறது.

தொப்புள்கொடி வங்கி பற்றிய மேல் விபரத்திற்கு...

இன்னொரு நிறுவனம் பற்றிய செய்தி

இது தவிர அப்பல்லோவும், ஒரு கொரிய நிறுவனத்துடன் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் சென்னை மற்றும் மற்ற இடங்கள்...

குமரன் (Kumaran) said...

நான் தாமதமா இந்தப் பதிவைப் படிச்சாலும் சரியான நேரத்துல தான் படிச்சிருக்கேன். ரொம்ப நன்றி நக்கீரன்.