Friday, November 17, 2006

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...2

அமெரிக்காவில் விலங்குக்கான ஸ்டெம் செல் சிகிச்சையும் ஆரம்பித்து விட்டனர். இப்போதைக்கு குதிரைகளுக்கு மட்டும் ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் நாய்களுக்கும் இச்சிகிச்சையை ஆரம்பிக்கப் போகிறார்களாம். குதிரைகளில் முக்கியமாக பந்தயக் குதிரைகளுக்கு இச்சிகிச்சை மிகவும் பயனளிப்பதாக கூறுகின்றனர். மூட்டு தேய்தல், எலும்புமுறிவு போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வியப்பளிக்கும் வகையில் மிகச்சீக்கிரமாக குணமாகிறதாம்.

நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும், நோய்வாய்ப்பட்ட குதிரையை அருகிலுள்ள வெட்னரி டாக்டரிடம் கூட்டிச் சென்றால், அவர் குதிரைக்கு மயக்க மருந்து அளித்து, அதன் உடம்பிலிருந்து குறிப்பிட்ட அளவு கொழுப்பை எடுத்து, ஸ்டெம்செல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்புவார். நாட்டில் மிகச்சில ஆய்வுக்கூடங்களே இப்பணியை மேற்கொண்டுள்ளன. அங்கு குதிரையின் கொழுப்பிலிருந்து ஸ்டெம்செல் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் வெட்னரி டாக்டருக்கு அனுப்ப படுகிறது. அவர் அதை குதிரைக்கு சரியான இடத்தில் ஊசி மூலம் ஏற்றுவார். அவ்வளவு தான். குதிரை கொஞ்சநாட்களில் மீண்டும் பந்தயத்திற்கு ரெடி. இதற்கு சராசரியாக ஆகும் செலவு 2000 அமெரிக்க டாலர்கள்.

இதே போன்ற அடல்ட் ஸ்டெம் செல் முறையை மனிதர்களுக்கும் மருத்துவர்கள் அவ்வப்போது பயன்படுத்துகிறார்கள். இச்சிகிச்சை முறை எல்லா நோயளிகளுக்கும் பயனளிப்பதாக இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இப்போதைக்கு, இரத்தம் மற்றும் எலும்பு சம்பந்தபட்ட வியாதிகளை குணப்படுத்த அடல்ட் ஸ்டெம் செல் முறையை பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் படித்த செய்தி ஜெர்மனியில் ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்ததாலோ/விபத்திலேயோ(சரியாக நினைவில்லை) அவருடை கபாலம் உடைந்து விட்டது. அடல்ட் ஸ்டெம் செல் முறையால் அவருடய கபாலத்தை மருத்துவர்கள் சரி செய்துள்ளனர். ஆனால் மிகப்பெரும் வியாதிகளான, மாரடைப்பு, கேன்சர், சிறுநீரக கோளாறு மற்றும் நீரிழிவு நோய் போன்ற வியாதிகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை முறை கட்டாயம் நிரந்தரமாக தீர்வளிக்கும் என்பதும் அதற்கு அடல்ட் ஸ்டெம் செல்களை விட எம்ப்ரையானிக் செல்களே மிகவும் பொருத்தமானது என்பதும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

எம்ப்ரையானிக் செல்களை ஆய்வகத்தில் எளிதாக மிகப் பெருமளவில் தயாரிக்க முடியும் என்பதாலும், மற்ற பல மனித உறுப்புகளின் செல்களுக்கு மாற்றாக இருப்பதும் (அடல்ட் செல்கள் சில மனித உறுப்புகளுக்கே மாற்றாக செயல்பட முடியுமாம்) ஆராய்ச்சியாளர்கள் எம்ப்ரையானிக் செல் ஆராய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இது குறித்த பல விவரங்கள் பல இணையதளங்களில் உள்ளது.

தொடரும்

4 comments:

சுந்தரவடிவேல் said...

stem cellக்கு மூலச் செல் என்று பாவித்து வருகிறேன்.
3ஐ இன்னும் காணுமே:))

Nakkiran said...

சுந்தரவடிவேல்

அடாடா...ஒரு பின்னூட்டம் கூட வரலியே?..மக்களுக்கு புடிக்கல போலிருக்கு நினைச்சுகிட்டு இருந்தேன்... 3வது பதிவுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை... ரொம்ப நன்றி.. கூடிய சீக்கிரம் 3ஆம் பகுதியை வெளியிடுகிறேன்...

குமரன் (Kumaran) said...

என்ன இப்படி சொல்லிட்டீங்க? நான் படிக்கிறேங்க. தொடர்ந்து எழுதுங்க.

சேதுக்கரசி said...

//stem cellக்கு மூலச் செல் என்று பாவித்து வருகிறேன்//

மூல அணு என்கிறார் அன்பு.