Friday, November 17, 2006

ஸ்டெம் செல்லா??? அப்டின்னா...1

அமெரிக்க தேர்தல் நடந்த வாரம், ஒரு வேட்பாளர் தனக்கு எதிராக போட்டியிடுபவரைக் குறித்து வானொலியில் குறை சொல்லிக் கொண்டிருந்தார். அவர் மிகப்பெரும் குறையாகச் சொன்ன ஒன்று, எதிர் வேட்பாளர் ஸ்டெம் செல் ஆராய்ச்சியை எதிர்க்கிறார். மக்களே ஸ்டெம் செல் ஆராய்ச்சியை போய் எதிர்ப்பவரை ஆதரிக்கலாமா.. அது இது என்று குற்றம் சாட்டினார்.. சரி அப்படி என்ன தான் ஸ்டெம் செல் ஆராய்ச்சி நடக்கிறது என்று இணையத்தில் மேய்ந்த போது கிடைத்த விஷயங்கள்.

நாம் எல்லாருமே, ஒரே ஒரு செல்லாக இருந்து பல கோடி செல்களாக பிரிந்து முழுமனிதனாக மாறுகிறோம். ஒரு ஆரோக்கியமான மனிதனின் ஏதாவது ஒரு பாகம் பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட செல்கள் அழிந்து ஆரோக்கியமான செல்கள் உருவாகி அப்பிரச்சனைய போக்குகின்றன. அப்படி நிகழாத போதுதான் மனிதன் நோயாளியாகிறான். எனவே மனிதனின் அனைத்து வியாதிகளுக்கும் பாதிக்கப்பட்ட செல்களே காரணம். அப்படியென்றால் வியாதியை குணப்படுத்த பாதிக்கப்பட்ட செல்களை சீர் செய்தாலோ, அல்லது அதற்கு பதிலாக ஆரோக்கியமான் செல்களை உருவாக்கினாலோ என்ன என்ற யோசனையின் விளைவு தான் இன்றைய ஆராய்ச்சியாளர்களின் ஸ்டெம் செல் ரிசர்ச்.

ஸ்டெம் செல்லுக்கு தன்னைத்தானே நீண்ட காலத்திற்குப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மையும், வேறு மனித உறுப்புகளின் செல்லாக மாற்றிக்கொள்ளும் தன்மையும் உண்டு. சரி இந்த ஸ்டெம் செல்கள் எங்கிருந்து கிடைக்கின்றன. முதலில் விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்கள் மனிதனின் எலும்பு மஜ்ஜையில் மட்டுமே இருக்கிறது என்று எண்ணினார்கள், ஆனால் பல வருட ஆராய்ச்சிக்குப்பிறகு, மனிதனின் பல பாகங்களில், பல தசைகளில் இந்த ஸ்டெம் செல்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். கடைசியாக மனித உடலில் உள்ள கொழுப்பில் அடர்வு மிக்க ஸ்டெம் செல்கள் உள்ளதாகவும், அதனை சுத்திகரித்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்தால் பல நோய்களை குணப்படுத்தலாம் என்பதை கண்டறிந்துள்ளார்கள். இப்படி மனித உடலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஸ்டெம் செல்களை அடல்ட் ஸ்டெம் செல்கள் என்பர்.

அப்படியென்றால் அடுத்த வகை ஸ்டெம்செல் என்ன?....மிகவும் பிரபலமாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருக்கும் எம்ப்ரையானிக் (embryonic ) ஸ்டெம் செல். இந்த எம்ப்ரையானிக் ஸ்டெம் செல் மனிதக்கருவிலிருந்து கரு உருவான எட்டு நாட்களுக்குள் பிரித்தெடுக்கப்படுகிறது. கண்டிப்பாக மனித உடலில் கருத்தரித்த கருவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதில்லை. வெளியே அதற்கென்று உள்ள கருத்தரிப்பு மையங்களில் கரு உருவாக்கப்பட்டு அதிலிருந்து ஸ்டெம் செல்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. இதுவரை அப்படி பிரித்தெடுக்கும்போது அம்மனித கரு அழிந்து போகின்றன. எனவே இவ்வாராய்ச்சிக்கு பலத்த எதிர்ப்பும் மக்களிடம் உள்ளது. விஞ்ஞானிகள் கருவிற்கு பாதகம் இல்லாமல், செல்லை பிரித்தெடுக்க இயலும் என்று முழுமையாக நம்புகிறார்கள். அவர்கள் அதற்கான ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர். இத்தகய எம்ப்ரையானிக் ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்குத்தான் ஜார்ஜ் புஷ்ஷின் அரசாங்கம் பெருமளவில் நிதி ஒதுக்கியுள்ளது.

தொடரும்..

6 comments:

Nakkiran said...

பின்னூட்ட கயமைத்தனம்

சேதுக்கரசி said...

அதென்னது "பின்னூட்ட கயமைத்தனம்"? :-D

உருப்படியான தொடர். வாழ்த்துக்கள்.

Nakkiran said...

சேதுக்கரசி

அது ஒன்னுமில்லை...ஒரு பின்னூட்டம் கூட வரலியா??.. தமிழ்மணம் முகப்புல ரொம்ப நேரம் நம்ம பதிவு தங்கலயா??? இல்ல மக்களுக்கு புடிக்கலயானு சந்தேகம்..

அதுனால நம்ம பதிவுல நாமே ஒரு பின்னூட்டம் போட்டா மறுமொழியப்பட்ட இடுகைகள்ல நம்ம பதிவு இன்னும் சில மணிநேரம் தமிழ்மணத்துல தெரியும்...

அதுதான் பின்னூட்ட கயமைத்தனம்.. இதெல்லாம் தமிழ்மணத்துல ஜகஜமப்பா.... :)

Nakkiran said...

சேதுக்கரசி

தமிழ்மணத்துல இன்னொரு கயமைத்தனம் புழக்கத்திலுண்டு... தலைப்பு கயமைத்தனம்... பதிவுக்கு சம்பந்தமே இல்லாம்.. கான்ட்ரோவர்சியா இல்லனா மக்கள் மிகவும் விரும்புகிற மாதிரி தலைப்பு வைக்கிறது... இதுவும் மக்கள நம்ம பதிவுக்குள்ள இழுக்குற டெக்னிக்..

தமிழ்மணத்துல காலந்தள்ள என்னன்ன கயமைத்தனமெல்லாம் பண்ண வேண்டியிருக்கு பாருங்க :)

சேதுக்கரசி said...

ம்.. நெனச்சேன் இதான் பின்னூட்டக் கயமைத்தனம்னு.

அப்புறம்.. ஒரு "மாஆஆஆதிரி" தலைப்பு போட்டே ஹிட் வாங்குற பதிவுகளைப் பத்தி நல்லாவே தெரிஞ்சிடுதுங்க தமிழ்மணம் பார்க்க ஆரம்பிச்ச புதுசுலேயே!!

//பதிவுக்கு சம்பந்தமே இல்லாம்.. கான்ட்ரோவர்சியா இல்லனா மக்கள் மிகவும் விரும்புகிற மாதிரி தலைப்பு வைக்கிறது...//

இன்னொண்ண சேர்த்துக்குங்க.. ஒரு "மாஆஆஆதிரியா" தலைப்பு வைக்கிறது!!

சேதுக்கரசி said...

இதைப் பாருங்க..
http://bhaarathi.net/sundara/?p=297