Monday, July 10, 2006

நிச்சயம் மீண்டும் வெல்வோம்...

இந்தியாவிற்கு கடந்த இரு நாட்கள் கொஞ்சம் சோகமான நாட்கள் தான்.
ISROவின் GSLV ராக்கெட்டும், DRDOவின் அக்னி III ஏவுகணையும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்துள்ளன.

http://msnbc.msn.com/id/13801904/#storyContinued

ISRO மற்றும் DRDOவின் விஞ்ஞானிகள் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளனர். அல்லும் பகலும் பாடுபட்டு உருவாக்கிய ராக்கெட்டும், ஏவுகணையும் தோல்வியடைந்தால் நிச்சயம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். இதே விஞ்ஞானிகள் தான் நம்நாட்டிற்கு அக்னி I, அக்னி II ஏவுகணைகளை கொடுத்தார்கள். இதே விஞ்ஞானிகள் தான் சென்ற முறை GSLV ஐ வெற்றிகரமாக ஏவினார்கள்.

நாட்டின் மிகப்பெரிய அறிவுஜீவிகள் நம் விஞ்ஞானிகள், நிச்சயம் இத்தோல்வியிலிருந்து மீண்டு, இத்தோல்வியிலிருந்து நிறைய கற்று, தவறுகளை களைந்து மீண்டும் சாதனை படைத்து இந்தியாவை வல்லரசு நாடாக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

4 comments:

Sivabalan said...

நிச்சயம் மீன்டும் வெற்றிவாகை சூடுவார்கள்!!

சீனு said...

இத்துணை வெற்றிகளில் கைதட்டிய நாம், இந்த ஒரு தோல்வியால் கைவிடவா போகிறோம். நிச்சயம் அவர்களுக்கு நாம் பக்கபலமாகவே இருப்போம்.

புதுமை விரும்பி said...

நெற்றிக்கண்,

கீழே உள்ளது, இந்த விசயம் சம்பந்தப்பட்ட என் பதிவு.
http://pudhumaivirumpi.blogspot.com/2006/07/indian-space-program.html

Nakkiran said...

புதுமை விரும்பி
உங்கள் பதிவுக்கு சென்று பார்த்தேன். பதிவில் நீங்கள் இணைத்துள்ளதாகச் சொல்லும் எந்த புகைப்படமும் தெரியவில்லை. அங்கேயே இது குறித்து பின்னூட்டமிட்டுள்ளேன்.