Friday, July 14, 2006

பகைவனுக்கு அருளுதல் அவசியமா?

இந்தியா 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிலநடுக்க நிவாரண நிதியாக பாகிஸ்தானுக்கு அளித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டது. உடனடியாக இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி உதவியது. அது மட்டுமில்லாமல் நிலநடுக்க நிவாரண நிதியாக 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிப்பதாக உறுதியளித்தது. அதன்படி ஜூலை 11ம் தேதி, ஆம் ஜூலை 11ம் தேதி 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு அளித்தது. அதே நாளில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்களை கொல்ல தீவிரவாதிகளுக்கு உதவி பாகிஸ்தான் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.

http://www.adnki.com/index_2Level_English.php?cat=Politics&loid=8.0.320012712&par=0

http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900SID/LSGZ-6RLGYM?OpenDocument

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

அதெல்லாம் சரி, நாம் ஏன் பாகிஸ்தானுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்கவேண்டும்?
பரஸ்பரம் உதவிக்கொள்ளும் அளவுக்கு நட்பு நாடா?
இல்லையே!!! ஏற்கனெவே மூன்று தடவை போர் புரிந்து பல்லாயிரம் ராணுவ வீரர்களை இழந்துள்ளோமே!!!
ஒரு வேளை பாகிஸ்தான் ஏழை நாடாக இருக்குமோ?
இருக்கலாம் என்று எண்ணும் வேளையில் ஒரு செய்தி கண்ணில் பட்டது.

http://www.jpost.com/servlet/Satellite?cid=1150885885707&pagename=JPost%2FJPArticle%2FShowFull

http://www.newsmax.com/archives/articles/2006/6/29/172920.shtml

ஜுன் 30ம் தேதி அமெரிக்க அரசாங்கம் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளது. 18 F-16 ரக புதிய விமானங்களை பாகிஸ்தான் வாங்க போகிறது. இதில் மூன்று விஷயங்கள் மிகத்தெளிவாக புரிகிறது.

1) பாகிஸ்தான் ஒரு ஏழை நாடல்ல. 5 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து ராணுவ தளவாடங்களை வாங்கும் ஒரு நாடு ஏழை நாடாக இருக்க வாய்ப்பில்லை. வாங்கும் 18 விமானங்களில், 2 விமானத்தைக் குறைத்தாலும் நிவாரணப்பணிகளை மிகச் சிறப்பாகச் செய்யலாம்.

2) சரி, பாகிஸ்தான் ஏன் F-16 ரக விமானம் வாங்குகிறது. ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கவோ? ரஷ்யாவில் குண்டு போடவோ? அணுகுண்டு தரச் சொல்லி சீனாவை மிரட்டவோ? இல்லையடா, அது உன் மீது போர்தொடுக்க வாங்கப்பட்டவை. உன்னை அழிக்க, உன்னை மண்ணோடு மண்ணாக்க வாங்கப்பட்டவை. இது இந்தியாவில் இருக்கும் கடைசி குடிமனுக்கும் தெரிந்த நிதர்சனமான உண்மை.

3) இந்திய உதவியால் மிச்சமடைந்த 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் என்ன செய்யும்? நாட்டு முன்னேற்றத்திற்கு பயன்படுத்த போகிறதா? ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பயன் படுத்த போகிறதா? இல்லையே? எல்லையில் இருக்கு தீவிரவாத கும்பல்களுக்கு பண உதவி செய்து இந்தியாவில் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவ உதவ போகிறது

பிறகு ஏனய்யா பாகிஸ்தானுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்கவேண்டும்? நான் என் நாட்டிற்காக கட்டிய வரிப்பணம், என் சகோதரியை விதவையாக்கியவர்களுக்கு, என் சகோதரனை எல்லையில் கொல்லத்துடிப்பவனுக்கு ஏன் தர வேண்டும்? எவ்வளவு யோசித்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

நம் பிரதமர் உலகம் போற்றும் பொருளாதார மேதை, அறிவுஜீவி, ஏன் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு கொடுத்தார்?
உங்களுக்கு ஒருவேளை தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள், புரிந்து கொள்கிறேன்

7 comments:

கால்கரி சிவா said...

சார் இதுக்கு பேர்தான் சார் காந்தீயம்.

Suka said...

ஒருவேளை சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது என்பது இதுதானா !

நாகை சிவா said...

இது போன்று உதவி புரிவது தவறு இல்லை. ஆனால் அவன் தான் அடிக்கிறான் என்று தெரிந்து இருந்ததும், இங்கே அடிப்பட்டவர்களை அமைதியாக இருங்கள் என்று கூறுவதில் தான் அர்த்தம் இல்லை. அவன் ஒரு அடி அடித்தால் திருப்பி நாலு அடியா அடி. அடுத்த தடவை உன்னை அடிப்பதற்கு இல்லை இல்லை தொடுவதற்கே அவன் நாலு தடவை யோசிப்பான்.

Anonymous said...

politicians will never change

Anonymous said...

சொந்த நாட்டை பாதுகாக்க முடியாத இந்தியா?

http://eebarathi.blogspot.com/2006/07/blog-post_115315975363466326.html

MSV Muthu said...

யோசிக்க வைக்கும் கேள்வி. பகைவன் என்றாலும் நான் உதவுவேன்; அந்த அளவிற்கு நான் காந்தீயவாதி என்பதைக் காட்டுகிறதா? இல்லை, பார் நான் வல்லரசாகிக் கொண்டிருக்கிறேன் என்பதைக் காட்டுகிறதா? இல்லை, உதவி செய்தால் அதை நினைத்துப்பார்த்தாவது நாளை பாகிஸ்தான் பகைமை பாராட்டது என்ற தொலைநோக்கு எண்ணமா? எனக்கும் தெரியவில்லை.

Anonymous said...

our PM donot know several thousand people longing for roof over their head in india,children
die due to malnutrition ? y they r not concerned abt this?