Tuesday, July 11, 2006

குளோபல் வார்மிங் - நான் என்ன செய்ய முடியும்?

சிறிது நாட்களுக்கு முன் The Day After Tomorrow படம் பார்த்த போது கொஞ்சம் பீதியாகத்தான் இருந்தது. சரி மனித இனத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. என்ன, நாம் நினைப்பதைவிட மிகச் சீக்கிரமாக இம்முடிவு ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளது. உலக நாடுகளும், உலக தலைவர்களும், ஐ.நா சபையும் ஒன்று சேர்ந்து யோசித்து இந்த குளோபல் வார்மிங் பிரச்சனையை சமாளிக்க வேண்டும். தனி மனிதனாய் நாம் என்ன செய்ய முடியும் என்று தான் இது நாள் வரை நான் எண்ணிக் கொண்டு இருந்தேன்.

ஆனால் இணையத்தில் இது குறித்து தேடும் போது கிடைத்த தகவல்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அதிக அளவு கரியமில வாயுவை(CO2 ) காற்று மண்டலத்தில் கலப்பதே இந்த குளோபல் வார்மிங்கிக்கான காரணம் என்பது நாம் அறிந்ததே. மின்சாரம் மற்றும் எரிபொருள் உபயோகத்தை முடிந்த வரை கட்டுப்படுத்தினால் காற்று மண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் கட்டுப்படுத்தலாம். எனவே நீங்கள் மின்சாரம் மற்றும் எரிபொருள் உபயோகத்தை முடிந்த வரை சிக்கனப்படுத்தினாலே குளோபல் வார்மிங்கை தடுக்க உம்மால் இயன்றதை செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.


  1. வேலை முடிந்ததும் கணினியை அணைப்பது.
  2. 10 நிமிடத்திற்கு மேல் கணினி செயல்படாமல் இருந்தால், கணினி திரை தானாகவே அணைவது போல் கணினியில் settings செய்தல்.
  3. நடந்து செல்ல முடிந்தால், எரிபொருள் வாகனங்களைத் தவிர்ப்பது
  4. துணி துவைக்கும் இயந்திரத்தில் வெந்நீர் ப்யன்படுத்துவதை தவிர்ப்பது
  5. தேவையற்ற இடங்களில் மின்விளக்குகளை அணைத்தல்.
  6. கதவு மற்றும் சன்னலை திறந்து வைத்து இயற்கை வெளிச்சம் பெறுவது
  7. Incandescent light bulbs பதிலாக Compact fluorescent light bulbs பயன்படுத்துதல்.
  8. நம் வாகனத்தில் சக்கரங்களின் காற்றழுத்தத்தை சரியான அளவில் வைத்திருத்தல்.
  9. நம் வாகனத்தை சரியான வேகத்தில் ஓட்டுதல்
  10. நம் வாகனத்திற்கு Emission Test செய்து சரிபார்த்தல்

இது போல் ஒரு தனிமனிதனால் குளோபல் வார்மிங்கை த்டுக்க என்னவெல்லாம் செய்யலாமெனெ சில இணையதளங்களில் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள், அதற்கான சுட்டி

http://www.fightglobalwarming.com/page.cfm?tagID=135

http://www.worldwildlife.org/climate/involved/individuals.cfm

இத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, உலகளவில் குளோபல் வார்மிங்கை எதிர் கொள்வதற்கு எடுக்கப்பட்டு வரும் விஷயங்கள் நம்பிக்கையூட்டுவனவாக உள்ளன. Greenhouse gases ( விலங்கு கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் வாயு ), Green Power (காற்று மின்சாரம், சூரியமின்சாரம்) , எத்தனால் என்று பல மாற்று எரிசக்திகள் குளோபல் வார்மிங்கை கட்டுபடுத்த உபயோகப்படுத்தப்பட போகிறது

இத்தளத்தில் குறிப்பிட்டுள்ள பல குறிப்புகளை நடைமுறைப்படுத்த நம்மால் இயலும். இதை செயல்படுத்துவதின் மூலம் நீங்கள் பணத்தையும் சேமிக்கலாம். உங்கள் கொள்ளுபேரன் விளையாட இவ்வுலகத்தையும் காப்பாற்றி வைக்கலாம். எல்லாம் மிக எளிய விடயங்கள். இதில் குறிப்பிட்டுள்ள விடயங்களை செயல்படுத்த அரசாங்கத்தின் தயவு தேவையில்லை, அரசியல்வாதிகளின் பரிந்துரை தேவையில்லை. இதற்குபின்னும் நான் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டுமென்று தோன்றினால் ஒரேஒரு தடவை The Day After Tomorrow படம் பார்க்கவும்.

10 comments:

இயற்கை நேசி|Oruni said...

நக்கீரன்,

அருமையான, எளிமையாக கடைபிடிக்கத்தக்க யோசனைகள். பதிவிற்கு நன்றி!

Sivabalan said...

நல்லதொரு பதிவு.. மிக்க நன்றி..

இது பற்றி தெக்கிகாட்டான் சில பதிவு செய்துள்ளார்..

http://thekkikattan.blogspot.com/2006/04/blog-post_114584455467439948.html

அதுவும் நன்றாக உள்ளது..

ராபின் ஹூட் said...

இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கார் வைத்திருப்பவர்கள், அத்தியாவசிய, அவசிய/அவசரத் தேவைகள் தவிர்த்து பொதுவான போக்குவரத்தைப்(public transport) பயன்படுத்துதல்...

அசுரன் said...

தங்களது நோக்கத்தை நான் சந்தேகப்படவில்லை...

ஆனால் நாம் சேமிக்கும் அந்த மாசுபாட்டை யார் காலி செய்வார்கள். atleast ஏதேனும் ஒரு உள்ளூர் முதலாளி?

கிடையாது.....

அதையும் க்யோடொ ஒப்பந்தத்தின் படி ஏதேனும் நாடுகளுக்கு விற்று அவர்கள் அதற்க்கு ஈடாக அசுத்தம் செய்து சந்தை தேவைக்கு உற்பத்தி செய்து பணம் சம்பாதிப்பார்கள்.

தனி மனித ஒழுக்கம், தனி மனித பங்களிப்பை மறுதலிக்க வில்லை. ஆனால் நீங்கள் refer செய்த அந்த தளங்கள் குறைந்த பட்சம் ஒரு சமூகமாக இயற்கையுடனான முரன்பாட்டை தீர்க்க என்ன வழி சொல்லுகின்றன?

தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நம்புகிறேன்.

இதற்க்கு தொடர்புடைய எனது பதிவு இரு பதிவுகளை பாருங்கள்.

http://poar-parai.blogspot.com/2006/07/1.html

http://poar-parai.blogspot.com/2006/07/ii.html

நன்றி
அசுரன்

Nakkiran said...

திரு அசுரன் அவர்களுக்கு,

நீங்கள் அவ்விரு கட்டுரைகளையும் படித்தேன். உங்களுடைய மற்றும் திரு.மருதையன் அவர்களின் ஆதங்கமும் எனக்கு நன்கு விளங்கிற்று. மிக அற்புதமான கட்டுரை...

//அதையும் க்யோடொ ஒப்பந்தத்தின் படி ஏதேனும் நாடுகளுக்கு விற்று அவர்கள் அதற்க்கு ஈடாக அசுத்தம் செய்து சந்தை தேவைக்கு உற்பத்தி செய்து பணம் சம்பாதிப்பார்கள்//

இங்கு தான் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் வருகிறார்கள். இது நிச்சயம் உலகளவில் தீர்க்கப் பட வேண்டிய விஷயம் என்பது என் கருத்து.

நான் இப்பதிவில் குறிப்பிட்டதெல்லாம் ஒரு தனிமனிதனாய் குளோபல் வார்னிங்கை தடுக்க நாம் என்ன செய்யலாம் என்று.

//தனி மனித ஒழுக்கம், தனி மனித பங்களிப்பை மறுதலிக்க வில்லை.//

நன்றி


// நீங்கள் refer செய்த அந்த தளங்கள் குறைந்த பட்சம் ஒரு சமூகமாக இயற்கையுடனான முரன்பாட்டை தீர்க்க என்ன வழி சொல்லுகின்றன? //

http://www.worldwildlife.org/about/
http://www.worldwildlife.org/wildplaces/

மேலே குறிப்பிட்டுள்ள சுட்டிகளில் பார்த்த போது அவர்கள் உலகளவில் பல நாட்டு மக்களுடன் சேர்ந்து தான் இப்பணியை மேற்கொண்டுள்ளார்கள் என்பது என்னுடைய புரிதல்

இயற்கை நேசி|Oruni said...

நக்கீரன்,

இந்த பெரும் "கார்பரேட் இயற்கை காவலர்களின்" அனுகுமுறை எப்படியென்றால்;

"பிள்ளையையும் கிள்ளிவிட்டுவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதைதான்."

ஒரு உதாரணம், மழைகாடுகளில் மட்டுமே உற்பத்தியாகும் அல்லது வளரும் இந்த பிரம்பு நாற்காலி செய்யும் மூங்கில் இனம், ஆர்கிட்டுகள் மற்றும் ஏனையெ மர வகைகளை சந்தையில் நல்லதொரு டிமாண்ட்-யை ஏற்படுத்தி விட்டுவிட்டு, பிறகு இந்த WWF, WCS போன்ற ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வேற்று மையங்களுக்கு பணம் கொடுத்து, ஆராய சொல்லி கடைசியில், முறையற்ற காடுகளின் அழிப்பே ஒரு ஆராயச்சிக்குட்படுத்தப் பட்ட தாவரத்தின் அல்லது விலங்கின் ஆழிவுக்கு காரணம்மென்று அங்கு வசிக்கும் மக்களை திட்டுவதில் என்ன பொருள் இருக்கிறது.

ஒன்றும் சொல்வதற்கில்லை, இப்பொழுது நாம் கண்டுபிடித்த பணம் மட்டுமே நம் கண்களுக்கு முன்னால் மற்றவை அனைத்தும், நாம் நடத்தும் அரசியலில் சிக்கி சின்ன பின்னாமாகிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

Anonymous said...

மிக நல்ல பதிவு, நன்றி

குமரன் (Kumaran) said...

நம்மால முடிஞ்சதை நாம செய்யத் தான் வேணுங்க. நீங்க சொன்னதுல பலவற்றை நினைவிருத்திச் செய்து கொண்டிருக்கிறேன் பல நாளா.

Nakkiran said...

மிக்க நன்றி குமரன்

Maraboor J Chandrasekaran said...

மற்றொரு விஷயம், இன்றும் நமது பள்ளிக்கூடங்களில், ப்ரிஜ்ஜில் உள்ள CFC கொண்ட foam நிரப்புகிறார்கள் எனும் பொய் செய்தி. என்க்குத் தெரிந்து 1992லிருந்தே, Montreal Protocolலின் படி, CFC உள்ள அனைத்து விஷயங்களையும் எல்லா நாடுகளிலும் நிறுத்தி, அதற்கு மாற்றுப்பொருளாக, hcfc அல்லது n-pentane அல்லது நீரால் ஊதும் foamகளையே எல்லா நிறுவனங்களும் உபயோகிக்கின்றன.

நல்ல கட்டுரை. நேரமாச்சு, லைட்டை அணைக்கிறேன் :-) கொஞ்சம் மாசு கட்டுப்பாட்டிற்காக!