Tuesday, September 11, 2007

T20 நல்லதா கெட்டதா???

ஏற்கனவே பலர் அடிச்சு, துவச்சி, அலசி, காயப்போட்ட தலைப்புதான். ஆனா மறுபடியும் இன்னைக்கு T20 உலகக்கோப்பை முதல் ஆட்ட ஸ்கோர்கார்டு பார்த்தவுடனே மறுபடியும் பேசுவோம்னு தோன்றியதால் இந்த பதிவு.
இன்றைக்கு முடிந்த முதல் T20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டம் நம்ம மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் நடந்து முடிஞ்சுது. ஸ்கோர்கார்டு பார்க்க இங்கே சொடுக்கவும்.

எனக்கு எப்பவுமே பெளலிங் தான் பிடிக்கும் (பேட்டிங் வராது அது வேற விஷயம்) அதுவும் வெளிநாடுகளில் இருக்கும் பவுண்ஸிங் மற்றும் ஸ்விங் கண்டிஷண்ஸ்ல பவுலர்கள் திறமையா பந்து வீசும் போது நடக்கிற ஆட்டமே இன்டிரஸ்டிங்தான். பேட்ஸ்மேனோடு முழுதிறமையே அப்போ தான் வெளிப்படும். பேட்ஸ்மென் கிட்டதட்ட கிரீஸ்ல பரதநாட்டியம் ஆடுவார் பாருங்க..கண்கொள்ளா காட்சி. அப்போ செஞ்சூரி அடிச்சா அவன் பேட்ஸ்மேன். எனக்கு பேட்டிங் பிச்சுல 300+ ரன் மேட்சை விட பெளலிங் பிச்சுல 230-250 ரன் மேட்ச் ரொம்ப பிடிக்கும்.

ஏற்கனவே எல்லா ஊருலியும் பிட்ச்செயெல்லாம் பேட்டிங் பிச்சாக்கி பெளலர பாதி சாவடிச்சிட்டாங்கோ... ஓடி வந்து உயிரக் கொடுத்து பெளலிங் போட்டா சொத்துனு விழுந்து அடி ராசானு பேட் முன்னால போய் பால் நிக்குது. இப்போ எல்லா டீமும் 300 அடிக்கிறது சாதாரணமா போச்சு. ஓவர் ஸ்டெப் நோ பால், பெளன்ஸர் நோ பால், வைட் பால், எக்ஸ்ட்ரா ரன், பவர்பிளே ன்னு என்ன என்னவோ கொண்டு வந்து பெளலர நல்லா அமுக்கியாச்சு. இப்போ T20 பெளலருக்கு சாவு மணி அடிக்க வந்திருக்குது.

அந்த ஸ்கோர்கார்டை கொஞ்சம் பாருங்க. என் கண்ணுல இரத்தமே வந்துடுச்சு.
West Indies innings - 205(6 wickets; 20 overs) (10.25 runs per over)
Gayle Run-117 Ball-57 4s-7 6s-10 SR-205.26

நம்ம சூப்பர் பவுலர் பொல்லாக் பாருங்க
SM Pollock O-4 M-0 R-52 w-1 R/R-13.00

இதெல்லாம் அந்த மாரியாத்தாளுக்கே அடுக்குமா. பொல்லாக் மனசு என்ன பாடுபட்டு இருக்கும். எல்லா பாலும் பவுண்டரிக்கு அடிக்க இது என்ன பேஸ் பாலா... கிட்டதட்ட பேஸ்பால் மாதிரி ஆயிட்டு வருது கிரிக்கெட். T20 கூட வரட்டும் விளையாடலாம் ஆனா ரூல்ஸ் பேலன்ஸ்டா இருக்கனுமில்ல. பேட்ஸ்மென் அண்ட் பவுலர்ஸ் இரண்டு பேருக்கும் வாய்ப்பு இருக்கிற மாதிரி இருக்கனுமில்ல. ஒருத்தன அவுட் பண்ணாலும் அடுத்தவன் வந்து மறுபடியும் காட்டுத்தனமா சுத்ததான் போறான். 20 ஓவர்ல எப்படிய்யா 10 விக்கெட் எடுக்க முடியும். அதுவும் ஒரு பவுலருக்கு 4 ஓவர் தான்.

சரி தென்னாப்ரிக்கா அவுட்டுனு பார்த்தா, அவனுங்க வெஸ்டிண்டீஸ்க்கும் மேல காட்டானா இருக்கானுங்க...
South Africa innings - 208 - (2 wickets; 17.4 overs) - (11.77 runs per over)
பவுலருங்கல நினச்சாலே அளுக்காச்சியா வருதய்யா....

இந்த சக்-தே-இந்தியா படத்துல ஒரு சீன்.. கிரிக்கெட்டுக்கு கிடைக்கிற மரியாதை ஹாக்கிக்கு கிடைக்கிறதில்லனு. கிரிக்கெட்டுலியே பேட்ஸ்மென்னுக்கு கிடைக்கிற மரியாதை பவுலருக்கு கிடைக்கிறதில்ல.. ஏன் டீம் கேப்டன் பதவிக்கு கூட பேட்ஸ்மென் தான் ப்ர்ஸ்ட் சாய்ஸ். கிரிக்கெட் விளையாட்டில் பவுலருக்குரிய மரியாதையை இந்த ICC கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிட்டு வருது. இதெல்லாம் கிரிக்கெட்டுக்கு நல்லதில்ல அம்புட்டுதான்.. சொல்லிட்டேன்.

1 comments:

வடுவூர் குமார் said...

நான் இனிமே பௌலிங் போட மாட்டேன் .. போ...