Tuesday, July 31, 2007

சஞ்சய் தத் - கோடே

சஞ்சய் தத் - ஒரு குற்றவாளி
கோடே - ஒரு நீதிபதி

தண்டனை அளித்த ஒரு நீதிபதிக்கும், தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கும் நடந்த உரையாடல்.

Dutt: I honestly thought I would get the benefit of probation. I have to wind up a few things.

Judge Kode: Don't get upset. I have got a duty to do. This is not the final court.

Dutt: You are like family to us.

Judge Kode:This is a momentary thing. You can appeal in a higher court.

Judge Kode: Don't get perturbed by this order.

Dutt: I am very tired.

Judge Kode: You have a long way to go in your career. You are the number one in your field. Don't lose faith in yourself.

இதை படித்தவுடன், இதைவிட ஒரு பெருந்தன்மையான உரையாடல் நீதிபதிக்கும் குற்றவாளிக்கும் இடையே நடக்க இயலாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நீதிபதியின் வார்த்தைகளில் ஒரு மனிதாபிமானமும், அதே சமயம் கடமையுணர்வும் மிகச் சரியாக பிரதிபலிக்கிறது. குற்றவாளிதானே என்ற எண்ணமோ, நீதிபதி நாம் தான் பெரியவர் என்ற எண்ணமோ இல்லாமல் மிகச் சரியான வார்த்தைகள் மூலம் நீதிபதி குற்றவாளியை அணுகியுள்ளார். மேலும், இதுவரை அவர் விபத்தில் கை உடைந்த நாட்கள் தவிர இந்த வழக்கின் விசாரணை நாட்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லையாம். இது அவரின் கடமையுணர்ச்சியைக் காட்டுகிறது. மற்றுமொரு சிறந்த இந்தியன்

சஞ்சய் தத் - நிச்சயம் குற்றவாளிதான். உண்மையோ, பொய்யோ இந்த வழக்கில் சிக்கிய பிறகு அவர் நிச்சயம் மாறியுள்ளார் என்று தான் நான் அவர் நடவடிக்கைகளில் இருந்து கணிக்கிறேன். அதற்கு இந்த உரையாடலும் ஒரு எடுத்துக்காட்டு. எந்த பிரச்சனையும் இல்லாமல் 4 1/2 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்டு வெளியே வந்து முன்னாபாய்-3 படத்தை நமக்கு தருவார் என்று நம்புவோம்.

6 comments:

Thekkikattan|தெகா said...

நன்றாக கிண்டல் அடித்து இருக்கிறீர்கள் என்பது மட்டும் விளங்குகிறது :-)

Nakkiran said...

Thekkikattan|தெகா

உங்களின் பின்னூட்டத்தை படித்த பிறகு, கிண்டல் அடிக்கும் மனதோடு இப்பதிவை படித்தேன்... நீங்கள் சொல்வது சரிதான்.. அந்த எண்ணத்தோடு படித்தால் சரியான கிணடல் பதிவு போலதான் தோன்றுகிறது...

ஆனால் செய்தியை படித்த போது ஏற்பட்ட நியாயமான உணர்வில் தான் இப்பதிவை எழுதினேன்...

ஏன் தெகா சார், சொன்னதில் ஏதாவது பிழை உள்ளதா... கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அதிகமாக புகழ்ந்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் சொல்லியிருப்பது சரியே.....

Thekkikattan|தெகா said...

நக்கீரா,

ஆனால் செய்தியை படித்த போது ஏற்பட்ட நியாயமான உணர்வில் தான் இப்பதிவை எழுதினேன்...//

இன்னமும் கிண்டல் செய்வது போலத்தான் இந்தப் பதிலும் அமைந்துள்ளது :-))

சொன்னதில் ஏதாவது பிழை உள்ளதா... கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அதிகமாக புகழ்ந்திருக்கலாம். //

என்ன புகழ்ந்திருப்பீர்கள் எப்படி தெரிந்தோ தெரியாமலோ தானும்(தத்) நடந்த குண்டு வெடிப்பில் 300 உயிர்களுக்குமேல் காவு கொடுப்பதில் கலந்து கொண்டோம் என்பதனை மனதில் நிறுத்தியா...? எனக்கு புரியவில்லை, நீங்கள் எதனை நினைத்து உணர்ச்சி வசப் படுகிறீர்கள் என்று.

இந்த மீடியாக்கள் சொல்வதை காட்டிலும் உங்களுக்கு இது சார்ந்து ஏதோ "உண்மை" தெரிந்துருப்பது போல் எனக்கு எண்ணச் செய்கிறது. என்னவென்று பகிர்ந்து கொள்ளுங்களேன்... தெரிந்து கொள்வோம்.

Nakkiran said...

தெகா,

//எப்படி தெரிந்தோ தெரியாமலோ தானும்(தத்) நடந்த குண்டு வெடிப்பில் 300 உயிர்களுக்குமேல் காவு கொடுப்பதில் கலந்து கொண்டோம் என்பதனை மனதில் நிறுத்தியா//

இது உண்மையில்லை.. குண்டு வெடிப்புக்கும் சஞ்சய்தத் துக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்று தெளிவாக கோர்ட் சொல்கிறது... இதை உண்மையென்று நானும் நம்புகிறேன்..

அவர் மீது நிரூபிக்கப் பட்ட குற்றம் AK-56 ரக துப்பாக்கி வைத்திருந்தது. அது உண்மை. அதற்கான தண்டனையை தான் அவர் அனுபவிக்கிறார் அனுபவிக்கப் போகிறார்.

கைதான நாள் முதல், அவர் அனைத்தையும் சட்ட ரீதியாக தான் அணுகினார். ஏற்கனவே 16 மாதம் சிறையில் இருந்துள்ளார்..மீடீயாவில் ஒரு நாள் கூட அவர் தான் தவறு செய்யவில்லையென்றோ, பொய் குற்றச்சாட்டு என்றோ, அல்லது குற்றச்சாட்டை நியாயப்படுத்தியோ ஒரு நாள் கூட எனக்கு தெரிந்து பேசியது இல்லை.

இப்பொழுது கூட அவருக்கு நன்னடைத்தை சான்றிதழ் கிடைத்துள்ளது.. ஆனால் அவர் உதவியாளரை துப்பாக்கியை மறைக்க வைத்து அவரையும் குற்றவாளி ஆக்கியதால் தான் அச்சான்றிதழை ஏற்க முடியாது என்று நீதிபதி கூறியிள்ளார்..

தாவூதை பார்ட்டியில் சந்தித்ததும் ஒரு குற்றமாக சேர்த்துள்ளார்கள் என நினைக்கிறேன். அப்படியென்றால், 90% பாலிவுட் மக்கள் இன்றைக்கு சிறையில் தான் இருக்கவேண்டும். எனினும் அதற்கும் சேர்த்து தான் இந்த தண்டனை...

நான் சொல்ல வருவது என்னவென்றால்
சஞ்சய் தத் ஒரு குற்றவாளிதான்.. ஆனால் ஒரு சாமானிய குற்றவாளி தான் செய்த குற்றங்களிலிருந்து தப்பிக்க செய்யும் தகிடுதத்த வேலைகளை கூட தான் ஒரு செலிபிரட்டியாக இருந்த போதும், ஒரு எம்.பி யின் மகனாக இருந்த போதும் எதுவும் செய்யாமல் அனைத்தையும் சட்டரீதியாக சந்தித்தார், அதை நிச்சயம் பாராட்ட வேண்டும்...

தந்தூரி கேஸ் ஆகட்டும், பெஸ்ட் பேக்கரி கேஸ் ஆகட்டும், பாரில் ஒரு பெண்ணை கொலை செய்த கேஸ், இன்னும் பல கேஸ் ஆகட்டும் எவ்வளவு பொய்கள், தகிடுதத்தங்கள்...அது போல் ஒரு வேலையை கூட அவர் செய்யவில்லை...

இன்றும் அவருக்கெதிராக தீர்ப்பு வந்த பிறகும் ஒரு வார்த்தை அதற்கு எதிராக பேசாமல், அதற்கு அடுத்த கட்ட சட்ட நடவடிக்கையில் தான் யோசிக்கிறார். தனக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதியுடன், பெருந்தன்மையுடன், பொறுமையுடன் உரையாடுகிறார்.. எத்துனை பேருக்கு இது கை வரக்கூடும் அல்லது எத்துனை பேர் இது போல் செய்துள்ளனர்...

Nakkiran said...

நான் சொல்ல நினைத்ததை என்னை விட மிகத் தெளிவாக விளக்கியுள்ளார் இந்த பத்திரிக்கையாளர்.

http://www.ndtv.com/convergence/ndtv/showcolumns.aspx?id=COLEN20070021610

Thekkikattan|தெகா said...

தங்களின் பொறுப்பான பதிலுக்கு நன்றிகள், நக்கீரா!!