Wednesday, June 06, 2007

$17.00

சிவாஜி பட டிக்கெட் விற்பனை தமிழ்நாட்டில் ஆரம்பித்ததோ இல்லையோ அமெரிக்காவில் ஆரம்பித்துவிட்டது. இங்கு கலிஃபோர்னியா சாண்டியாகோ வில் ஜூன் 17ம் தேதி சிவாஜியை திரையிடுகிறார்கள். டிக்கெட் விலை தெரியுமா? 17 அமெரிக்க டாலர்கள் கிட்டதட்ட இன்றைய நிலவரத்துக்கு 700 ரூவா...too much...ம்ம்ம்ம்





பொதுவாக இந்திய திரைப்படங்களின் விலை இங்கு ஆங்கிலப்படங்களை விட கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஆங்கிலப்படங்கள் 8 முதல் 10 டாலர் வரை இருக்கும். இந்திப்படங்கள் பொதுவாக $10.50 க்கும், தெலுங்கு மற்றும் தமிழ் படங்கள் $11 க்கும் விற்கப்படுவது வழக்கம். சந்திரமுகி கூட 11 டாலரில் தான் பார்த்தேன். ஆனால் சிவாஜி, இப்பொழுது 17 டாலருக்கு திரையிடப்படுகிறது.

இதுக்கெல்லாம் பயந்துடுவமா என்ன??? 51 டாலர் கொடுத்து 3 டிக்கெட் (பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு சினிமாக்கு போனா வீடு திரும்ப முடியாது) வாங்கியாச்சில்ல.. மனசு கஷ்டமாதான் இருக்கு. என்ன பண்றது.. இப்பொல்லாம் ரஜினி படம் தவிர்க்கமுடியாததா போச்சு... ரஜினியை திட்டரவங்க கூட படம் பார்க்க மறக்கிறதில்லை....ம்ம்ம்ம்ம்

6 comments:

Boston Bala said...

---இதுக்கெல்லாம் பயந்துடுவமா என்ன???---

:))

இருந்தாலும்... திருட்டு விசிடி-க்கு ஏவியெம்+விநியோகஸ்தர்களே அடி போடுகிறார்கள்.

இலவசக்கொத்தனார் said...

எங்க ஊரில் 21 டாலர். அம்புட்டு குடுத்துப் பார்க்கப் போவதில்லை என முடிவே பண்ணியாச்சு. வீட்டில் மூணு பேர் போனா 21+21+14+25(இதரச் செலவுகள்)என கிட்டத்தட்ட ஒரு முழு நோட்டு எடுத்து வைக்கணும். அப்படி ஒன்றும் தியேட்டரில் பார்க்க தோணலை.

வவாசங்கம் இலவச டிக்கெட் குடுத்தா வேணா பார்க்கலாம். :))

துளசி கோபால் said...

இங்கேயும் நம்மூர்லே தியேட்டர்லே போடறீங்களான்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க.

போடலாம் பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு டிக்கெட் 50 டாலர்ன்னாத்தான் எனக்குக் கட்டுப்படி
ஆகும். கூட்டம் இல்லையே(-:

ஏற்கெனவே 3 படம் போட்டு கையைச் சுட்டுக்கிட்டு இருக்கேன். அது ஒரு அனுபவம்!

நம்மாளுங்க இவ்வளவு கொடுத்து வரமாட்டாங்க.

டிவிடி வரட்டும். பார்க்கலாம்.

ILA (a) இளா said...

நமக்கு இங்கே 15 பழுக்குது, இந்த லட்சணத்துல இரண்டு கூட்டாளிங்க 2 நாளைக்கு கூப்பிடுறாங்க. 30 பழுக்க போவுது :((

Boston Bala said...

---இரண்டு கூட்டாளிங்க 2 நாளைக்கு கூப்பிடுறாங்க. 30---

படையப்பா வந்தபோது எனக்கும் இதே நிலைமை. பேரம் பேசி ரெண்டு தடவை ஃப்ரீயா பார்க்கப் பாருங்க ;)

சேதுக்கரசி said...

கொத்ஸு.. முழு நோட்டா?? முழு நோட்டெல்லாம் பார்த்து ரொம்ப ரொம்ப நாளாகுது ;-)

இந்தப் படத்துக்கு நான் $16 கொடுத்ததே ரொம்ப ஓவர் :-(