Wednesday, February 28, 2007

மென்பொருள் நிறுவனங்களின் மீது வரி

இந்தியாவில் இருக்கும் IT மற்றும் BPO நிறுவனங்களுக்கு இந்திய அரசாங்கம் 10 வருடம் வரிவிலக்கு அளித்திருந்தது. 2009 ஆம் ஆண்டோடு முடியும் இந்த வரிச்சலுகையை மேலும் சிறிது காலத்திற்கு நீட்டிக்க இந்தியாவிலுள்ள IT மற்றும் BPO நிறுவனங்கள் நமது பிரதமருக்கு மிக சமீபத்தில் NASSCOM நடத்திய ஒரு கருத்தரங்கில் கோரிக்கை வைத்தன. ஆனால் நமது நிதியமைச்சரோ இந்த ஆண்டு முதலே அனைத்து IT மற்றும் BPO நிறுவனங்களும் 11.22% Minimum Alternate Tax கட்ட வேண்டும் என்று 2007ஆம் ஆண்டுக்கான் பட்ஜெட்டில் அறிவித்துவிட்டார்.

இதற்கு சில நிறுவனங்கள் கவலை தெரிவித்திருந்தாலும், முன்னணி நிறுவனங்களான டாடா, இன்ஃபோசிஸ், விப்ரோ போன்றவை இதனால் பெரிய பாதிப்பில்லை என்றே தெரிவித்துள்ளன. ஆனால் NASSCOM, இந்த வரிவிதிப்பு IT மற்றும் BPO துறையின் முன்னேற்றத்திற்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு இது மிகப் பெரிய சுமை என்றும் அறிவித்துள்ளது. உலகில் சில நாடுகள் இன்னும் இது போன்ற துறைகளில் தங்கள் நாடுகளில் முதலீடு செய்ய வரிவிலக்கு அளித்துக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இத்தகய முடிவு வருந்தத்தக்கது என்றும் அறிவித்துள்ளது. இன்னும் சில IT மற்றும் BPO நிறுவனங்கள், அரசு 2009 வரை வரிவிலக்கு என்னும் உறுதிமொழியை காப்பாற்ற தவறி விட்டது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

நமக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது. ஏதாவது செய்து நன்றாக இருக்கும் IT மற்றும் BPO துறைகளின் முன்னேற்றத்தைக் கெடுக்காமல் இருந்தால் போதும் என்பதே என்னுடய வேண்டுதல்.

1 comments:

Nakkiran said...

சேதுக்கரசி

உங்க பின்னூட்டத்தை பப்லிஷ் செய்தேன்.. ஆனால் ஏனோ ப்ளாக்கர் அதை பதிவில் காண்பிக்கவில்லை.. மன்னிக்கவும். சென்ற டிசம்பர் இந்தியாவிற்கு சென்றிருந்தேன்.. திரும்பி வந்தவுடன், அலுவலகத்தில் நிறைய வேலை இப்போது தான் மீண்டும் நேரம் கிடத்தது..