Friday, October 12, 2007

அட்வைஸ் ப்ளீஸ்

நான் இருக்கும் ஊரில் நிறைய தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இதில் பல வருடங்களுக்கு முன் அமெரிக்கா வந்தவர்களும் உண்டு, சில நாட்களுக்கு முன் அமெரிக்கா வந்தவர்களும் உண்டு. அனைவருக்கும் தமிழின்பால் ஆர்வமுண்டு. இதை எப்படியென்னால் உறுதியாக சொல்லமுடிகிறதென்றால், தங்கள் பிள்ளைகளை பல்வேறு வேலைகளுக்கிடையிலும் தமிழ் படிக்க அனுப்புகிறார்கள். பிள்ளைகளும் மிக ஆர்வமாக தமிழ் பயிலுகிறார்கள்.


இதில் பாதிபேர் அமெரிக்க குடியுரிமையோ அல்லது பச்சை அட்டையோ வைத்திருப்பவர்கள். திரும்பி தமிழகம் வரும் சாத்தியக்கூறு மிகக்குறைவு. அப்படி இருந்தும் தமிழ் படிக்க தவறாமல் வாரயிறுதி தமிழ் வகுப்புக்கு இவர்கள் வருவதற்கு காரணம் தமிழ்ப்பற்றன்றி வேறு என்ன இருக்க முடியும்.


இப்போது பிரச்சனை என்னவென்றால், சிறு பிள்ளைகளுக்கு தமிழ் கற்று கொடுக்கும் வேளையில், பெரியவர்களுக்கு தமிழ்மணம் தமிழ் பதிவுலகத்தை அறிமுகப்படித்தலாமே என்ற எண்ணம் என்னுள் கிடந்து அரிக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் ஓரிரு வருடங்கள் பதிவுலகில் பதிவுகள் படித்த அனுபவமுள்ள எனக்கே ஒரு சில விஷயங்களில் கருத்து சொல்ல பயமாயிருக்கும் வேளையில் அவர்களுக்கு தமிழ்மணத்தைப் பற்றி சொல்ல, அவர்கள் ஏதாவது ஒரு சர்ச்சை பதிவோ அல்லது பின்னூட்டமோ போட, நம்ம ஆட்கள் பாய்ந்து விடுவார்களோ என்றொரு பயம்.


இதிலென்னொரு விஷ்யம் என்ன்வென்றால், நான் சொல்லும் மக்களில் ஓரளவிற்கு பிராமண நண்பர்கள் வேறு உண்டு. தமிழ்மணத்தில் வேறு பாதி பதிவுகள் பிராமண எதிர்ப்பு பதிவுகளாக உள்ளன. மேலும் **ணி பதிவுகள் வேறு தமிழ்மணம் எங்கும் நிறைந்துள்ளன. அதனால் இவர்களிடம் போய் தமிழ்மணத்தை அறிமுக படுத்தி ஏதாவது ஏடாகூடமாகி விடுமோ என்று பயமாயிருக்கிறது.. என்ன செய்யலாம் சொல்லுங்க...

6 comments:

ILA (a) இளா said...

18 வயசுக்கு மேல இருந்தா பார்க்கச் சொல்லுங்க. அதுதான் நல்லது. இந்த கட்டற்ற சுதந்திரம் அவுங்களுக்கு தமிழ் மேலயும் அதனோட கலாச்சாரம் மேலயும் வேற மாதிரியான உணர்வை தந்துரும்

துளசி கோபால் said...

அட்வைஸ் கொடுக்க காசா பணமா?

ஒரு பக்கம் பார்த்தால்..'சும்மா இருப்பதே சுகம்'

அடுத்த பக்கம் பார்த்தால்..'நான் பெற்ற இன்பம் & துன்பம் இவ்வையகம் பெறுக'

போகட்டும்......... துன்பம் பகிர்ந்துகொண்டால் கு(ரை)றையுமாமே......


அறிமுகப்படுத்தி விடுவதே மேல்:-)))))

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

முதலில் கணினியில் தமிழில் எழுதவும் படிக்கவும் மின்மடல் அனுப்பவும் சொல்லித் தாருங்கள். எழுத்தார்வம் இருப்பவர்களுக்கு ப்ளாகர், வேர்ட்ப்ரெஸ்ஸில் பதிவு தொடங்கி எழுதக் கற்றுக் கொடுங்கள். பதிவுகளைப் படிக்க கூகுள் ரீடர், ப்ளாக்லைன்ஸ் போன்றவற்றை அறிமுகப்படுத்துங்கள். தமிழுக்கான அறிமுகம் திரட்டிகளில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்றில்லையே?

சிறில் அலெக்ஸ் said...

//தமிழுக்கான அறிமுகம் திரட்டிகளில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்றில்லையே?//
உண்மை. திரட்டிகளை (தமிழ்மணம் மட்டுமல்ல) அறிமுகப் படுத்தையில் அதன் நன்மை தீமைகளை சொல்லிவிடுங்கள்.

டிஸ்க்ளெய்மர் போட்டு பதிவு போடுறது மாதிரி.

RSS ரீடர்களைப் பற்றி சொல்வதும் நல்லது. தங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் படிக்க முடியும்.

தேன்கூடு இந்த வசதியைத் தருகிறது ஆனால் தமிழ்மணத்தைப் போல அங்கு அதிக எண்ணிக்கையில் பதிவுகள் இல்லை.

Tamil.kanimai.com எல்லா திரட்டிகளையும் திரட்டுகிறது.. அதையும் பரிந்துரைக்கலாம் (with disclaimer)

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர் சொன்னது சரியான பாதையாக இருக்கிறது. அதெல்லாம் செய்தால் அவர்களாகவே தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள். நீங்களாகவே சொல்லி எதற்கு பாவத்தையும் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்ள வேண்டும்? நான் அப்படி செய்யவே மாட்டேன். :-)

Unknown said...

tamilan tamilan enru solli enkalai thiviravathikalai aakki vitterhali enkalai akathikalakki vitterkale tamilnattai vittu thantinal enkalai yar nee enru ketkinranar en thainattu makkal een entha avalam enkum entha tamilanukku een india thesiya moliyana hinthiyai enkalukku tharavillai entha tamilnadu athanalthan enkalai indian enrale nampavillai een thainattu makkal ethaivita verenna kotumai venum enkalukku